பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ஆம் தேதி முதல் போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தற்போது அறிவித்திருக்கின்றனர்.
ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சு நடத்தியும் தீர்வு ஏற்படாததால் வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக சங்கங்கள் அறிவித்திருக்கின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு முத்தரப்பு பேச்சுவார்த்தை அரசு தரப்பில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு இரண்டு வருடம் காலதாமதமாக நடக்கிறது என்று போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக தெரிவித்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக தொமுசா, சிஐடியு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் இதை வலியுறுத்தி ஏற்கனவே கோரிக்கையினை கொடுத்திருக்கிறார்கள்.
அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றசாட்டையும் முன்வைத்திருக்கின்றார்கள். சில மாதங்களுக்கு முன்னதாகவே வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக வேலை நிறுத்த நோட்டீசு தொழிலாளர் நல ஆணையரிடம் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கொடுத்திருக்கிறார்கள்.
இதுவரை கோரிக்கைக்கு அரசு தீர்வை எட்ட வில்லை என்று போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவிக்கிறார்கள். எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிக்க வேண்டும். தமிழகத்தில் இருக்க கூடிய 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்க கூடிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிகமாக பணியாற்றி வரக்கூடிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரக்கூடிய 25 ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.