Categories
தேசிய செய்திகள்

பிப்-22 வரை 144 தடை உத்தரவு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…!!!!

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் காவி அணிந்து வந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை 19 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் விவகாரத்திற்காக போராட்டம் நடைபெற்று வருகிறது.

உடுப்பியில் நேற்று முன்தினம் முஸ்லிம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு மாணவர்கள் தலையில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரில் பள்ளி கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவை அமல்படுத்த போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது; கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் இந்த விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பெங்களூருவில் இது மாதிரியான போராட்டங்களை தடுப்பதற்காக பள்ளிகள், பி.யூ.  கல்லூரிகள் ,பட்ட படிப்பு  கல்லூரிகள், கல்வி நிறுவனங்களை சுற்றிலும் 200 மீட்டர் தூரத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் முன்பு போராட்டம் நடத்தவும், கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 9ஆம் தேதி (நேற்று) முதல் வருகிற 22-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிக்கையில்  வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |