Categories
மாநில செய்திகள்

“பிப்ரவரி-14 ஊரடங்கு போடுங்க” இளைஞர்கள் வைத்த கோரிக்கை…. விழுந்து விழுந்து சிரித்த முதல்வர்…!!

இளைஞர்கள் சிலர் பிப்ரவரி-14 ஆம் தேதி ஊரடங்கு போடுமாறு முதல்வர் எடப்பாடியிடம்  கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து பிரச்சாரத்தின்போது முதல்வரிடம் இளைஞர்கள் சிலர் பிப்ரவரி 14ஆம் தேதி லாக்டவுன் போடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதைக் கேட்டதும் முதல்வர் குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். இதையடுத்து முதல்வர் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று புன்னகையுடன் கூறியுள்ள அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |