ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகர் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. பிபின் ராவத் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய உத்தரகாண்ட் புஷ்கர்சிங் தாமி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.