பிரித்தானிய நாட்டின் சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவனை நாய் கடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய நாட்டில் பிட்புல் வகை நாய்களை வளர்ப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தாலும், சிலர் சட்டவிரோதமாக நாயை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நாயை ஆன்லைன் மூலமாக வாங்கிய உரிமையாளர் சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்றபோது, 10 வயது சிறுவனை திடீரென கடித்தது. அந்த நாயின் உரிமையாளரால் அதைப் பிடிக்க முடியவில்லை.
எனவே அந்த நாயானது சிறுவனின் தொண்டைப்பகுதியை கடித்ததில் சிறுவன் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் நாயை பிடிக்க சென்றபோது அது காவல்துறையினரை தாக்க முயன்றதால், வேறு வழியில்லாமல் மற்ற காவலர்கள் நாயை சுட்டு கொலை செய்தனர். சிறுவனை நாய் கொலை செய்திருந்தாலும், இவை நடப்பதற்கு காரணமாக இருந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.