நடிகை மீரான் மிதுன் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து ஒரு கருத்தை வீடியோவாக சமூக வலைதளங்களில் மீரா மிதுன் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் பெற்றனர். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இரண்டாவது குற்றவாளியான சாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜராகி இருந்தார். ஆனால் மீரா மிதுன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத வாரண்ட் பிறப்பிக்க நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய தினம் நீதிபதி அல்லி விடுமுறை என்பதால் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணதேவி முன்பு விசாரணைக்கு வந்த போது இன்றைய தினம் சாம் அபிஷேக் மட்டும் ஆஜரானார்.. அப்போது காவல்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிடிவாரண்ட் மீரா மிதுனுக்கு பிடிவாரென்ட் பிறப்பிக்கப்பட்டும் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை.. தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருவதாகவும், விரைவில் மீரா மிதுனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வைத்துள்ளார்..