Categories
சினிமா

“பிடித்ததை செய்து விடுங்கள்”…. சக பெண்களுக்கு மாதுரி தீட்சித் கூறிய அட்வைஸ்….!!!!

இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மாதுரி தீட்சித் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு, தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்நிலையில் மாதுரி தீட்சித் பேட்டி அளித்ததாவது ”நான் நடிகையான புதுசில் செட்டில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண். அப்போது மேக்கப், இயக்குனர், கேமரா, லைட்டிங் என அனைத்து பிரிவுகளிலும் ஆண்களே பணிபுரிந்தனர். ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். அவ்வாறு நான் திரையுலகை விட்டு விலகியது பைத்தியக்காரத்தனம் என என்னை பலர் திட்டினர்.

பெண்கள் தொழில், குடும்பம் இரண்டையும் சமப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனிடையில் நான் கேமரா முன் நடிகை மட்டுமே. அதேபோல் வீட்டிற்கு போனால் எனது குடும்பத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறேன். எனது தொழிலை திட்டமிட்டு கொண்டேன். இதன் காரணமாக தான் எனது குழந்தைகளை விட்டு நான் விலகிவிட்டேன். தூரமாக இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு வருவதே கிடையாது. சகபெண்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நேரம் எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. பிடித்ததை செய்து விடுங்கள். அதற்கேற்ற மாதிரி நிலைமைகளில் மாற்றம் அதுவாகவே வரும்” என்று கூறினார்.

Categories

Tech |