Categories
அரசியல்

பிஜேபியின் கைக்கூலி சீமான்…! நினைக்குறது ஒருபோதும் நடக்காது… மல்லை சத்யா கடும் தாக்கு ..!!

பிஜேபியின் கைக்கூலி சீமான் என மதிமுக மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முன்னணி நிர்வாகி மல்லை சத்யா பேசும் போது, பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது சொன்னார், பக்கத்து வீட்டில் கூடி குலாவி கொண்டிருப்பதை எட்டிப் பார்ப்பது தவறு. மாறாக அந்தப் பெண் துன்புறுத்தப்படுவதும், கொலைவெறி தாக்குதல் நடத்துகின்ற போது அவள் கதறுகின்ற போதும் அதை எட்டிப் பார்க்காமல்,

அதை கேட்காமல் இருப்போமேயானால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை காட்டிலும் அவள் என்னுடைய உற்ற சகோதரி என்று இருந்தால் நான் எப்படி இருக்க முடியும் ? என்று கேட்ட அண்ணா, தமிழில விடுதலை புலிகளுக்காக ஆகச்சிறந்த களத்தை அமைத்து தந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஈழத் தமிழர்களுக்காக வரலாற்றுக்காக தன்னுடைய சட்டமன்ற பொறுப்பே தூக்கி எறிந்த டாக்டர் கலைஞர்,

சிங்கள அரசு மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வாருங்கள் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த அம்மையார் ஜெயலலிதா ஆகியோர்  கண்ணுறங்குகின்ற இடத்தை திராவிட சுடுகாடு என்று சீமான் சொல்லி கொண்டு திராவிட தேசியத்தை அவர் கொச்சைப்படுத்துகின்றார். இன்றைக்கு  தமிழ் தேசிய சிந்தனையாளர்களை குறிவைத்து தாக்குகின்ற செயல்பாட்டையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.

எனவேதான் இவர் பிஜேபியினுடைய கைக்கூலிகளாக தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. பிஜேபி உடைய கைக்கூலிகளாக இருக்கின்ற காரணத்தினால் தான் தமிழ் தேசிய சிந்தனையை… திராவிட இயக்க சிந்தனையை இங்கே முற்றாக ஒழித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அதை அனுமதிக்கவும் நாங்கள் முடியாது, அதற்கான வல்லமையும் வழியும் உங்களுக்கு இல்லை என்பதை பொதுவெளியில் நிரூபித்து காட்டுவதற்கு இந்த கூட்டம் தயாராக இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.

Categories

Tech |