பிசிசிஐ தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.. சாதாரண மக்களைத் தாண்டி அமைச்சர்கள், நடிகர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கிடையே தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் தொற்று தற்போது இந்தியாவில் பரவிவருகின்றது.
இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலிக்கு கொரோனா இருப்பது உறுதி செயப்பட்டுள்ளது.. அதனை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் கங்குலி.. அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது..