Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிசாசு- 2’ படத்தில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

மிஷ்கினின் பிசாசு-2 படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Act Santhosh Prathap on Twitter: "#raman #SarpattaParambarai… "

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ‌.

Categories

Tech |