Categories
சினிமா

பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு…. மிஷ்கின் அறிவிப்பு…..!!!!

தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். படத்தின் பெயரில் பிசாசு இருந்தாலும், ஏற்கனவே வந்த பிசாசு படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். இந்தப் படம் குறித்து பேசியவர், நடிப்புக்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றார். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் நின்று போன பிசாசு 2 படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசை. பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகும் என மிஷ்கின் அறிவித்துள்ளார்.ஏற்கனவே வெளியான பிசாசு திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டிருந்ததால், இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |