Categories
மாநில செய்திகள்

“பிங்க் நிறத்தில் மாறிய ஏரி”….. அதிர்ச்சியில் தமிழக மக்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சதுப்புநிலம் அருகே அமைந்த ஏரி ஒன்றில் ஏரிநீர் அதில் பிங்க் நிறத்தில் காட்சியளித்தது. இதைப்பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏரியின் வண்ணம் உருமாறியதற்கு ஆல்கே எனப்படும் பூஞ்சைகள் வளர்ந்து இருப்பதே காரணமாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏரியில் சயனோ பாக்டீரியா வளர்ச்சி அடைந்து அதன் நிறம் மாறி இருக்கக்கூடும்.

அந்த ஏரியை ஆளில்லா விமானம் ஒன்றின் உதவியுடன் மேலிருந்து படம் பிடித்து உள்ளனர். அந்த ஏரி பளிச்சென்று பிங்க் நிறத்தில் காட்சி அளிக்கின்றது. இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பணியாளர்கள் ஏரியிலிருந்து மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளனர். பள்ளிக்கரணை பகுதி மக்கள், நச்சு பொருட்களை வெளியிடும்  சையனோ பாக்டீரியாவால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்பட கூடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Categories

Tech |