பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கின்றது. முந்தைய ஐந்து சீசன்களைப் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கின்றார். இந்த சூழலில் வழக்கம் போல போட்டியாளர் இவர்தான் அவர்தான் என சிலரின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. விக்ரமின் ஜெமினி படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த கிரண் தற்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு வீட்டிற்கு கிரண் செல்கின்றார் என பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் வரை எதையும் நம்ப முடியாது.
கிரண் ஒரு ஆப் வைத்துக்கொண்டு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்காக ரசிகர்கள் பணம் கொடுக்கின்றார்கள் இந்த சூழலில் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் வேற லெவலில் இருக்கும் என தெரிவிக்கின்றார்கள் ரசிகர்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வினை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வருமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அஸ்வின் மட்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் அவரை வைத்து தான் காதல் கதையை ஓட்டுவீர்கள் என்கின்றார்கள். ஆனால் அஸ்வின் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.