Categories
சினிமா

பிக் பாஸ் வீட்டில் ட்விஸ்ட்…. கடைசியில இப்படி ஆயிடுச்சே….. விஜயின் ஆருயிர் நண்பருக்கு ஏமாற்றம்….!!

தளபதி விஜயின் நண்பரான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் டைட்டில் வெல்லப் போவது யார் என தெரிந்து விடும். இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் மற்றும் அஷாரா இருவரும் வெளியேறினர். அதன் பிறகு நடத்தப்பட்ட கடும் போட்டியில் அமீர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முதல் ஆளாக சென்றார். அவரைத் தொடர்ந்து 7 பேர் மீதம் இருந்தனர். இதில் யார் வெளியேறுவார்கள் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த நிலையில் தளபதி விஜயின் உயிர் நண்பரான சஞ்சீவ் குறைவான ஓட்டுகளை பெற்று வெளியேறினார்.

சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒயிட் கார்ட் என்ட்ரியில் உள்ளே நுழைந்தார். இவரது எதார்த்தமான நடவடிக்கையால் பல ரசிகர்களால் கவரப்பட்டார். மேலும் விஜயின் நண்பர் என்பதால் தளபதி விஜயின் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஓட்டுப் போடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இவர் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் வெளியேறியது பல ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

Categories

Tech |