Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக் பாஸ் சீசன் 5” உறுதியான 8 போட்டியாளர்கள்…. யாரெல்லாம் தெரியுமா….? வெளியான தகவல்….!!

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு தொடர்ந்து நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தற்போது ஐந்தாவது சீசன் வரை வந்துள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியாளர்கள் யார் யார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு பல செய்திகள் போட்டியாளர்கள் பற்றி வெளியாகி இருந்தாலும் தற்போது எட்டு போட்டியாளர்கள் உறுதியாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தெரிய வந்துள்ளது. அந்தப் பட்டியலின் படி விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்து பின்னர் நடிகையாக மாறிய ஜாக்குலின், குக் வித் கோமாலியில் தனது தமிழால் சிரிக்க வைத்த சுனிதா,

விஜய் டிவியின் சின்னத்தம்பி சீரியலின் மூலம் பிரபலமான பவானி ரெட்டி, தன்னையே கலாய்த்து மக்களை சிரிக்க வைக்கும் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, விஜய் டிவியின் ஆபிஸ் சீரியலில் நடித்து மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமான சூசன், சார்பட்டா பரம்பரை படத்தில் ராமன் கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற சந்தோஷ் பிரதாப்,

தமிழ்நாட்டை சேர்ந்த மிஸ்டர் இந்தியா கோபிநாத் ரவி மற்றும் போதை ஏறி புத்தி மாறி படத்தில் நடித்த ப்ரதாயினி சர்வா என எட்டு பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உறுதியாக பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |