பிக்பாஸ் சீசன் 6-ல் பிரபல நடன இயக்குனர் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வண்ணம் இருக்கின்றது. பிக்பாஸ் வீடு காட்டை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் 6-வது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்கள் சொல்லப்படுகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. இந்த நிலையில் ஒரு பிரபலத்தின் பெயர் தற்பொழுது அடிபட்டு வருகின்றது. அவர் விஜய் நடிப்பில் வெளியான சுறா திரைப்படத்தில் நான் நடந்தால் அதிரடி என்ற பாடலுக்கு மாஸ் நடனம் அமைத்துக் கொடுத்த ராபர்ட் மாஸ்டர். அவர் ஆறாவது சீசனில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகின்றது.