பிரபல நடிகையும், மாடலுமான பிரதாய்னி சூர்வா பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. கடந்த நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
https://www.instagram.com/reel/CTuUUJ-jEUo/?utm_source=ig_embed&ig_rid=e673662f-e325-4ad1-9c7b-0015f6fad25f
இந்நிலையில் பிரபல நடிகையும், மாடலுமான பிரதாய்னி சூர்வா பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதாய்னி சூர்வா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உண்மையான போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதியாகிவிட்டது.