விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற தற்போது 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த 15 போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்றது.
இதில் பல சண்டை சச்சரவுகளுக்கு இடையே போட்டியாளர்கள் நன்றாக விளையாடினர். இந்நிலையில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அதாவது ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவருக்கு தற்போது வரைக்கும் ஒரு வாரத்திற்கு 1.50 லட்சம் முதல் 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.