Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் வெளியேறப்போவது யார் தெரியுமா?… இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டிங்க…!!!!

பிக்பாஸ் சீசன் 4-ல் இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். சோம் சேகர், கேபி, ஷிவானி, ரம்யா மற்றும் அஜித் ஆகியோர் நாமினேஷன் இல் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த வாரம் ஆஜித் வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது. இந்த வாரம் அவருக்கு மிகக் குறைந்த அளவு வாக்குகள் விழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே ஒருமுறை எலிமினேட் ஆகி எழிமினேஷன் ஃப்ரீ கார்டு மூலமாக தன்னை காப்பாற்றிக் கொண்டார். மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஆஜித் குடும்பத்தினர் அவர் இன்னும் போட்டியை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று கூறினர். “கடைசிவரை அவளுக்கு புரியாமலே போய்விட்டது” என்றும் இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் இன்னும் பேசாமல் இருப்பது ஏன் என்று வருத்தமாக பேசினர். இதனையடுத்து அவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது.

Categories

Tech |