வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறும்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி நாட்களை நெருங்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் ‘பிரீஸ் டாஸ்க்’ நடைபெறும் . இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருவார்கள் .
கடந்த சீசனில் சாண்டி மாஸ்டரின் குழந்தை , மனைவி வரும் நிகழ்வும் லாஸ்லியாவின் அப்பா மற்றும் குடும்பத்தினர் வரும் நிகழ்வும் காண்போர் கண்களை கலங்க வைத்தது . இந்த சீசன் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருப்பதால் பிரீஸ் டாஸ்க் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.