Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலத்திற்கு பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா…!!!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவருக்கு அர்ச்சனா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அடிக்கடி சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வருகிறது .

இந்நிலையில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா பிக்பாஸ் 4 செல்லப்பிள்ளை ஆஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘மக்களே எல்லோரும் உங்களுடைய வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவியுங்கள்.  இந்த வருடம் அவருக்கு சிறப்பு மிக்க வெற்றியான வருடமாகவும, சந்தோசமான வருடமாகவும் இருக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மற்ற பிக்பாஸ் பிரபலங்களும் ஆஜித்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |