Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் நடிகரின் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர், அயலான் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Sivakarthikeyan Kavin FC ™ on Twitter: "Television to Theater ❤?  @Siva_Kartikeyan anna growth is hard work, Dedication Person ? Man of  Simplicity ? Waiting for #kavin anna movie update ? #SKWithKavin ❤ @

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்த கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் கவின் ரசிகர்கள் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |