Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகிய வனிதா… வருத்தத்துடன் வெளியிட்ட அறிக்கை…!!!

நடிகை வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் வனிதா. இதை தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். இதையடுத்து வனிதா விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்தார். இதில் இவர் சுரேஷ் சக்கரவர்தியுடன் இணைந்து நடனமாடி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில் பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தனது வளர்ச்சி பிடிக்காதவர்கள் சிலரால் அவமானப்படுத்தபட்டதால் இந்த முடிவுவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Categories

Tech |