சாண்டி- சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி மாஸ்டர் இரண்டாவது இடத்தை பிடித்தார் . மேலும் இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாலா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளார்.
சமீபத்தில் சாண்டி மாஸ்டர் தனது மனைவி சில்வியா கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன்பின் சில்வியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் சாண்டி மாஸ்டர்- சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை சாண்டி மாஸ்டர் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.