Categories
சினிமா

பிக்பாஸ் அல்டிமேட்…. “பழைய சீசனில் நடந்ததை மீண்டும் பேசும் பாலாஜி”…. பதிலடி கொடுத்த சனம் செட்டி…!!!

ஒரு டெமண்ட் பெண்மணி சனம் செட்டியால் தனது பெயர் டேமேஜ் ஆனது என பாலாஜி முருகதாஸ் கூறியிருக்கின்றார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாக்ஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனிதா பிக்பாக்ஸ் நான்காவது சீசனில் நடந்ததையே பேசி வருகின்றார். தற்போது கூட்டணியில் பாலாஜி ராமதாஸ் இணைந்துள்ளார். சனம் செட்டியால்தான் தனது பெயர் டேமேஜ் ஆனது என பழைய கதையை கூறி, சனம் ஷெட்டியை சூடேத்தி வருகிறார் பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி.  நான் அழகிப் போட்டிக்காக ஒருசில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததாக பாலாஜி கூறி வருவதாக பிக்பாஸுக்கு புகார் அளித்துள்ளார்.

இதனை பிக்பாஸ் ப்ரோமோவில் போட்டு பின்னர் நீக்கியுள்ளனர் விஜய் டிவி. இவரின் இச்செயலால் ரசிகர்கள் பலர் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் எனக் கூறி வந்தனர். ஆனால் விஜய் டிவி இவருக்கு ரன்னர் அப்பை கொடுத்துள்ளது. பிக் பாஸ் சீசன்  4-இல் நடந்த நிகழ்வை ரசிகர்கள் மறந்து இந்நிகழ்ச்சியில் இவர் விளையாடி வருவதை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து வருகின்ற நிலையில் பாலாஜி மீண்டும் பழைய கதையை ஞாபகப்படுத்துகின்றார்.

பிக்பாஸில் இந்த வாரத்தில் ஏஞ்சல்ஸ்/ டெமண்ட்ஸ் போட்டி நடக்கின்றது. இதில் பாலாஜி என் வாழ்க்கையின் டெமண்ட் பெண்மணி சனம் செட்டி தான் எனக் கூறுகின்றார். பிரச்சனைகளை பொறுமையாக கையாண்டு வந்த சனம் உண்மையை நிரூபிப்பதற்காக சில வீடியோக்களை பதிவிட்டு பாலாஜி தான் பொய் கூறுகிறார் என பதிலடி கொடுத்து இருக்கின்றார். இப்பிரச்சனைக்கு காரணம், பாலாஜி சனம் டுபாக்கூர் என பேசிய வீடியோவை காட்டிய பிக் பாக்ஸ் சனம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார் என பேசிய வீடியோவை காட்டாதது தான் என்று கூறுகின்றனர் ரசிகர்கள். சனம் செட்டியால் தான் எடுத்த கெட்ட பெயரை மாற்ற வேண்டும் என்பதற்காக பழைய கதைகளை ஞாபகப்படுத்தும் பாலாஜி தற்போது நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடினாலே டைட்டில் வெல்லலாம் என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |