கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து படக்குழு கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகின்றது.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குகின்றார். சென்ற வருடம் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் போன்றோர் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனமானது தயாரிக்கின்றது.
#Vikram Completed 💥#KamalHaasan pic.twitter.com/Ulxw4uImwW
— KH FANZ ITWING (@RAREKAMAL_SONGS) February 26, 2022
படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் படக்குழுவானது கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. அப்போது கமல் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படத்திலிருந்து துள்ளுவதோ இளமை பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சென்ற வாரம் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். விலகிய ஒரே வாரத்தில் படப்பிடிப்பை முடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.