பிஎஸ்என்எல் நிறுவனம் 16 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நிமிடத்திற்கு 20 பைசா என ஆண் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ், டேட்டா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது. பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கட்டாயம் பலனைத்தரும். மேலும் பிஎஸ்என்எல் 147 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகின்றது.
அந்தத் திட்டத்தில் 147 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் அழைப்புகள், 10 ஜிபி டேட்டா ஆகியவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் ஆகியவை 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் ஏற்கனவே 30 நாட்கள் திட்டத்தை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.