Pm-kisan திட்டத்தின் கீழ் தகுதியற்ற 42 லட்சம் விவசாயிகளுக்கு 3,000 கோடி வழங்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எட்டு தவணைகளாக பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பதாவது தவணை பணம் இன்னும் ஓரிரு மாதங்களில் வழங்கப்பட உள்ளது. ஆனால் பலருக்கு இன்னும் பணம் வரவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகுதியற்ற விவசாயிகள் பலருக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை கிடைத்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது.
தகுதியற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்ட பின்னர் அதை மத்திய அரசு திரும்பப் வசூல் செய்துள்ளது. அவ்வாறு தகுதியற்ற விவசாயிகளுக்கு 42 லட்சம் பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பணம் திரும்ப வசூலிக்க பட்டதாகவும், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்தார் . pm-kisan பணம் வழங்கப்பட்ட விவகாரத்தில் அசாம் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 8.35 லட்சம் பேருக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து தமிழகத்தில் 7.22 லட்சம் தகுதியற்ற விவசாயிகளுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் 5.62 லட்சம் தகுதியற்ற விவசாயிகளுக்கும், மகாராஷ்டிராவில் 4.45 லட்சம் தகுதியற்ற விவசாயிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 2.65 லட்சம் தகுதியற்ற விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.554 கோடியும், பஞ்சாபில் ரூ.437 கோடியும், மகாராஷ்டிராவில் ரூ.358 கோடியும், தமிழகத்தில் ரூ.340 கோடியும், உத்தரப் பிரதேசத்தில் ரூ.258 கோடியும், குஜராத்தில் ரூ.220 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது.