Categories
அரசியல்

பிஎன்பி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்….. தாறுமாறாக உயர்ந்த வட்டி….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அனைத்து இமைகளுக்கான வட்டியை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தவணை காலங்களில் நிதி அடிப்படையில் கடன் விகிதத்தை உயர்த்தி உள்ளது. அதன்படி விளிம்பு செலவை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கிய பின் பணவீக்கம் வேகமாக உயர்ந்தது. பண வீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கி அனைத்து கடன்களுக்குமான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் முன்னணி வங்கிகள் அனைத்து இஎம்ஐகளுக்கான வட்டியை உயர்த்திய நிலையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் உயர்த்தியுள்ளது. இதனால் கார், வாகனம், வீடு மற்றும் தனிநபர் போன்ற நுகர்வோர் கடன்களுக்கு விலை நிர்ணயம் செய்யப் பயன்படுத்தப்படும் பென்ச் மார்க் கடந்த ஓராண்டு காலமாக இருந்ததை விட தற்போது 7.65 சதவீதத்திற்கு எதிராக 7.70 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |