Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி விகிதம் உயர்வு பற்றி?… ஊழியர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎப் கணக்கு வைத்திருப்போரை குஷிப்படுத்தும் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இப்போது அரசு தரப்பில் இருந்து பிஎப் கணக்குக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநிலங்களவையில் பிஎப் வட்டி உயர்வு தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஷ்வர் டெலி, 2021-2022 நிதி ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்ஓ) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.

இதையடுத்து ஊழியர் வருங்கால வைப்புநிதிக்குரிய வட்டி விகிதத்தினை அதிகரிக்க அரசு எதுவும் மறு பரிசீலனை செய்கிறதா என சபையில் ராமேஷ்வர் டெலியிடம் கேட்கப்பட்டது. ஆனால் வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தெளிவுபடுத்தினார். இதன் வாயிலாக பிஎப் கணக்கின் வட்டி விகிதத்தில் உயர்வு இல்லை என்பது தெளிவாக புரிகிறது. மேலும் அவர் கூறியதாவது, பொதுவருங்கால வைப்புநிதி (7.10%), மூத்தகுடிமக்கள் சேமிப்புத்திட்டம் (7.40%) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (7.60 %) ஆகிய திட்டங்களை விட இபிஎப் வட்டி விகிதம் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார்.

இது போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டியை காட்டிலும் பிஎப் மீதான வட்டி அதிகமாக உள்ளதால் அரசு மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்காது. அரசின் உத்தரவுப்படி பிஎப் மீதான வட்டி 8.10 சதவீதம் கிடைக்கிறது. இதனிடையில் இபிஎப் முதலீடுகளில் இருந்து இபிஎப் பெறக்கூடிய வருமானத்தைப் பொறுத்து தான் பிஎப் மீதான வட்டிவிகிதத்தில் மாற்றம் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1952ஆம் வருடம் இபிஎப் திட்டத்தின்படியே வருமானம் வழங்கப்படுவதாகவும் இணையமைச்சர் ராமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |