Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் சந்தாதாரர்களே…! விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…. என்ன தெரியுமா..??

பென்சன் தொகை உயர்வது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே பென்சன்  வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச மாதாந்திர பென்ஷன் ரூபாய் 1000 என்பது மிகவும் குறைவாகும் என நாடாளுமன்ற குழு கூறியுள்ளது.

மேலும் பென்ஷன் தொகையை உயர்த்துவது தொடர்பான முடிவை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம் என பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 7 கோடி பிஎஃப் சந்தாதாரர்கள் பயன் பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலைக்குழு அறிக்கையில்,  “எட்டு ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் மாதாந்திர பென்சன்,  என்பது இப்போது மிகவும் குறைவு” என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையின்படி தொழிலாளர்களுக்கான அனைத்து ஓய்வூதி திட்டங்களையும் நிபுணர்கள் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாதாந்திர ஓய்வுவுதியத்தை சரியான  அளவிற்கு அதிகரிக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை இயக்கப்பட்டால் ஊழியர்களுக்கான குறைந்தபட்ச பென்ஷன் தொகையாக 2000 ரூபாய் உயர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என பிஎஃப் உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கின்றனர்.  கொரோனா  சூழலில் பென்சன் தொகையை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில்  பென்சன் தொகை உயர்த்தப்பட்டால்  அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Categories

Tech |