பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது.
இப்போது 2021-22க்கான பிஎஃப் நிலுவைத்தொகை 8.1% வட்டியுடன் கிரெடிட் செய்யப்பட்டு கிரெடிட் வருகிறது. சிலருக்கு மட்டும் இன்னும் ஆகாமல் உள்ளது. அக்கவுண்ட்டிற்கு வந்துவிட்டதா இல்லையா என்பதை , https://www.epfindia.gov.in/ இணையதளத்துக்கு செல்லவும். அதில் Our Services பிரிவுக்கு செல்லவும். அதில் For Employees பகுதியை தேர்வு செய்யவும். அதில் Member Passbook பகுதியை கிளிக் செய்யவும். உங்களின் UAN நம்பர் மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி உள்ளே நுழையவும். இப்பொழுது உங்களுடைய விவரங்கள் அதில் இருக்கும்.