Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ பி எஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டி தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இருந்தாலும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டு க்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்த அறிவிப்பு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் தவறி உள்ளது என்பதை எளிதாக நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

பிஎஃப் பேலன்ஸ் தொகையை பார்க்க வேண்டுமென்றால் எஸ்எம்எஸ் மூலமாக, ‘EPFOHO UAN ENG’ என்ற முறையில் உங்களது UAN நம்பரை சேர்த்து 7738299899 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பது உங்களது போனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக வந்து சேரும்.

இதனைத் தவிர பிஎஃப் இணையதளம் மூலமாகவும் பேலன்ஸ் தொகையை நீங்கள் பார்க்க முடியும். அதற்கு முதலில் https://epfindia.gov.in/என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில்’Member passbook’என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

அதில் UAN மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட வேண்டும்.

அதன்பிறகு தோன்றும் பக்கத்தில் உங்களது பிஎப் கணக்கில் உள்ள மொத்த பணம் மற்றும் வட்டி மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பதை நீங்கள் எளிதாக பார்க்கலாம்.

மேலும் உங்களது மொபைலில் இருந்து 011-22901406 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் எளிதில் பிஎஃப் பேலன்ஸ் தொகையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இதனைத் தவிர மொபைலில் உமாங் ஆப் டவுன்லோட் செய்து அதில் எளிதாக உங்களது பிஎஃப் பேலன்ஸ் தொகையை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.

Categories

Tech |