Categories
தேசிய செய்திகள்

பிஃபா கால்பந்து உலகக்கோப்பை பார்க்க ஆசையா…? VIVO அறிவித்துள்ள செம சூப்பர் ஆப்பர்…!!!!!!

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் vivo மிகவும் பிரபலமானதாகும். அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன்களும் நன்கு விற்பனையாகி வருகின்றது. இந்த நிலையில் ஓணம் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த நிறுவனம் சில புதிய சலுகைகளை வழங்கியிருக்கிறது.  கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆஃபர் அது. அதாவது கால்பந்து உலக கோப்பை 2022 இலவசமாக பார்க்கும் வாய்ப்பை அறிவித்திருக்கிறது. இந்த சலுகைகள் பற்றி விளக்கமாகவும் இலவச டிக்கெட்களை வாங்குவது எப்படி என்பதையும் இங்கே பார்ப்போம்.

விவோ நிறுவனம் பல கவர்ச்சிகரமான ஆஃபர் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகின்றது அதில் சுவாரஸ்யமான ஆஃபரையும் அறிவித்து வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது. அந்த ஆஃபர் செப்டம்பர் 18ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும் இந்த சலுகையில் vivo x80 சீரிஸ், vivo v25 pro, vivo v23e, மற்றும் vivo y21g போன்ற பல ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கால்பந்து உலக கோப்பையை இலவசமாக பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை வாங்குபவர்களுக்கு வாரண்டி ஆறு மாதம் கூடுதலாகவும் நோ காசு இஎம்ஐ ஆப்ஷனும் கிடைக்கின்றது. இந்த நிலையில் விவோ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஓனம் சலுகைகளின் கீழ் 2022 உலகக்கோப்பை காண இலவச டிக்கெட் களை வெல்வதற்கான வாய்ப்பையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மொபைல் ஃபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கால்பந்து போட்டிகளில் நேரில் காணும் இலவச டிக்கெட் கிடைக்கிறது அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே இது கிடைக்கும் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலருக்கு கால்பந்து உலக கோப்பையை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருப்பதினால் கேரள ரசிகர்கள் விவோ மொபைலை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |