பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகவுள்ள ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் . இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவர் நடிகர் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தை தயாரித்து வருகிறார் .
மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்கு பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த #writer ✍️@thondankani @thehari___ @officialneelam @GRfilmssg @LRCF6204 @Tisaditi @PiiyushSingh @abhay_VMC @frankjacobbbb @doppratheep @govind_vasantha pic.twitter.com/u5PFR5c9tC
— pa.ranjith (@beemji) April 14, 2021
நேற்று பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘ரைட்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிராங்கிளின் ஜோசப் இயக்கும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்நிலையில் ரைட்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.