சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நாசர் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தைப் பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நடிகர் நாசர் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘தம்பி ரஞ்சித், உன்ன நான் பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சி ஒரு நூறு முத்தங்கொடுத்து “நன்றி” ன்னு ஒரு வார்த்த மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எஞ் சமூகத்துக்கு கொடுத்ததுக்கு’ என தெரிவித்துள்ளார்.