Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித்துடன் இணையும் சூர்யா?… வெளியான புதிய தகவல்…!!!

பா. ரஞ்சித் அடுத்தாக நடிகர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

Pa. Ranjith with actor surya latest stills and photos | Veethi

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இதன் பின் பா. ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

Categories

Tech |