Categories
சினிமா தமிழ் சினிமா

“பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது”….. படத்தை பார்த்த ரஜினி… என்ன சொன்னார் தெரியுமா…?????

பா.ரஞ்சித்தின் பெஸ்டான படம் நட்சத்திரம் நகர்கிறது என ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் சென்ற 31-ஆம் தேதி திரையரங்குகளில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த், நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை பாராட்டி உள்ளார். இது குறித்து ரஞ்சித் பகிர்ந்த ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “எழுத்து, இயக்கம், நடிகர்கள் தேர்வு, நடிகர்களின் நடிப்பு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்து துறைகளிலும் பெஸ்டான படிப்பு நட்சத்திரம் நகருகிறது” என பாராட்டி இருப்பதாகவும் அவரின் பாராட்டு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |