திரையுலகின் முன்னணி இயக்குனராக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க காதல் கதை கொண்ட படமாக தயாராக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படத்தில் காளிதாஸ், ஜெயராம் மற்றும் தூஷானா விஜயன் போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் கலையரசன், ஹரி கிருஷ்ணா, சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள்.
நீலம் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இரண்டாம் போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் காதலுக்கு பின்னால் இந்த சமூகம் உருவாக்குகிற கதைகள் என குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கின்ற இந்த ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.