பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவையில் ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் அங்கு கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாம்பரத்தை அருகே ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டிலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலையங்களும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நிர்வாகிகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மற்றும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனையடுத்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்து 22- ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். அப்போது 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை எதிர்த்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அயிரத்து 410 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனையடுத்து வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மன்னனை நிரம்பிய பாட்டில்களை சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசுகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் குறிப்பிட்ட அமைப்புகளில் அலுவலகங்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்தி போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில முழுவதும் இரவு நேர வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 250 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில் காவலர் தடுப்பு படை 2 பிரிவுகள், மாநில கமாண்டோ படை 2 பிரிவுகள், சிறப்பு அதிரடி படை 2 பிரிவுகள், கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் அனைத்து குற்றவாளிகளும் , அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.