பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த பாவனா அணிந்திருந்த உடை இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சர்ச்சையை பார்த்த நடிகை பாவனா அதற்கு பதிலடி கொடுத்திருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, நான் கை தூக்கும் போது தெரிந்தது என் உடல் அல்ல, நான் போட்டிருந்த உடலோடு ஒட்டி இருக்கும் ஸ்கின் டாப். மேலாடை மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை இல்லை என கோபத்துடன் கூறியுள்ளார்.
https://twitter.com/Dommtoretto2/status/1572861000013185024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1572861000013185024%7Ctwgr%5E7e2451b4f06bbf05261c9527327a7103715a5014%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fbhavana-dress-controversy-1664363413