பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் ‘தங்கம்’ கதையில் திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராமுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு ‘வான்மகள்’ என்ற டைட்டிலும் ,விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள கதைக்கு ‘லவ் பண்ணா உட்ரணும்’ என்ற டைட்டிலும், வெற்றிமாறன் இயக்கியுள்ள கதைக்கு ‘ஓர் இரவு’ என்ற டைட்டிலும், சுதா கொங்கரா இயக்கியுள்ள கதைக்கு ‘தங்கம்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கியுள்ள தங்கம் படத்தில் மூன்றாம் பாலினத்தவராக நடிகர் காளிதாஸ் ஜெயராம் சிறப்பாக நடித்திருந்தார் . இதுகுறித்து நடிகர் காளிதாஸ், ‘இந்த கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்ததும் சிறப்பாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அது நாடகத்தனமாக ஆகிவிடக் கூடாது என நினைத்தேன். படத்தை பார்த்த பலரும் எனது நடிப்பை பாராட்டினார்கள். எனக்கு அது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனக் கூறியுள்ளார் .