பாழடைந்த கட்டிடங்களில் தான் கோர்ட்டுகள் செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா தெரிவித்தார்.
மும்பை ஐகோர்ட்டில் அவுரங்காபாத் கிளையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா விழாவில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பல கோர்ட்டுகளில் முறையான வசதிகள் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. சில கோர்ட்டுகள் பாழடைந்த கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. நீதி கிடைப்பதற்கான வழியை மேம்படுத்த நீதித்துறை உள்கட்டமைப்பு முக்கியமானது. நீதித்துறை உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடப்படாமல் தேவையான சமயத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருவதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.