Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால் வியாபாரி அளித்த புகார்…. போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தூங்காவி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் பால் விற்பனை செய்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலக்கல் தரைப்பாலம் அருகே சென்ற போது 4 மர்ம நபர்கள் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை மிரட்டி 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

அப்போது வர்ம நபர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை முத்துக்குமார் குறித்து வைத்துக்கொண்டு வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துக்குமார் கூறிய வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த லோகநாதன்(25), இளங்கோவன்(28) ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தான் முத்துக்குமாரிடம் இருந்து வழிப்பறி செய்தது உறுதியானது. இதில் கைதான இளங்கோவனின் தந்தை காந்தி என்பவர் சேக்கல்முடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மற்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |