குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று குரங்கு குட்டிக்கு பால் பாட்டிலில் பால் ஊட்டுவது காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது
பெண்ணொருவர் மூன்று குட்டி குரங்குகளுக்கு பால் பால் பாட்டிலை கொடுக்கும் காணொளி சமூக வளைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அந்த காணொளியில் பெண்ணொருவர் குழந்தைகளுக்கு பாலூட்ட பாட்டிலில் பால் பவுடர் போட்டு தண்ணீர் கலந்து தயார் செய்து கொண்டிருக்கிறார் என்பது போலவே இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் அருகே ஓடி வருவது குழந்தையல்ல குரங்கு குட்டிகள்.
அழகான ஆடைகள் போட்டு மழலைகளாக துள்ளி குதித்து விளையாடுகின்றன. பால் பாட்டில் தயாராவதற்குள் குரங்குக்குட்டி உற்சாகமாக குட்டிக் கரணம் போடுவது பார்ப்பவர்களை சுவாரஸ்ய படுத்துகின்றது. ஒரு குரங்குக்குட்டி குழந்தையைப் போன்று பால் குடிப்பதற்கு தவிக்கின்றது. இந்த காணொளியை பதிவிட்டவர் இது உங்களை நிச்சயம் மகிழ்ச்சி படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். காணொளி எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
பால் பவுடர் கலந்து தயார் செய்யும் அந்தப் பாலை மூன்று குரங்கு குட்டிகளும் ஸ்டைலாக அமர்ந்து குடிக்கின்றன. கைகளுக்கு பால் கிடைத்ததும் அவை அமைதிகாக்கும் காட்சி பார்ப்பதற்கு ரசனையாக உள்ளது. இதுவரை 50 ஆயிரம் லைக்குகள் பெற்ற இந்த காணொளியில் ஒருவர் குரங்கு குட்டிகள் மனிதர்களைப் போன்று இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
Sure to make you happy!!! pic.twitter.com/meiTeuJTeq
— Flotsam&Jetsam Diaries – Trails and Tribulations… (@GahlautManish) October 8, 2020