Categories
தேசிய செய்திகள்

பால்கே விருதுக்கு தகுதியான பழம்பெரும் ஹிந்தி நடிகை…. வெளியான அறிவிப்பு….!!!!

பழம்பெரும் இந்தி நடிகையான ஆஷாபரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசானது அறிவித்து இருக்கிறது.

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு வருடந்தோறும் தாதா சாகேப் பால்கேவிருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னம் ஆகவும், வாழ்நாள் அங்கீகாரம் ஆகவும் இந்த விருது கருதப்படுகிறது. சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர்,  கே. விஸ்வநாத் ஆகிய திரையுலக ஜாம்பவான்கள் பல பேரின் புகழுக்கு தாதா சாகேப் விருது மேலும் பெருமை சேர்த்து இருக்கிறது.

இந்த நிலையில் பாலிவுட்டில் 1960, 1970-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த 79 வயது ஆஷா பரேக். இவருக்கு 2020ஆம் வருடத்திற்கான தாதா சாகேப் பால்கேவிருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்து இருக்கிறார். 1952 -1999 வரை திரைத் துறையில் நடிகையாகப் பணிபுரிந்தார். 1992ல் ஆஷா பரேக்குக்கு பத்மஸ்ரீவிருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டுகளில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா போன்றோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Categories

Tech |