Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்…. ஜமாத்தார்களின் மதநல்லிணக்க செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

பால்குடம் எடுத்து வந்த பக்தர்களின் வெப்பத்தை தனித்த  ஜமாத்தார்களின் மத நல்லிணக்க  வீடியோ வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பர்மா பஜார் வழியாக பால்குடம் எடுத்து வந்தனர்.

அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்  ஜமாத்தாரர்கள் சார்பில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களின் வெப்பத்தை தணிப்பதற்கு  மினி மோட்டாரை கொண்டு குழாய் மூலம் சாலைகளில் தண்ணீர் பாய்ச்சினர். இதனால் பால் குடம் எடுத்து வந்த பக்தர்களின் வெப்பம் தணிந்தது. இதனையடுத்து ஜமாத்தார்களின் சார்பில் நடைபெற்ற இந்த மதநல்லிணக்கசெயலை   பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி  வருகிறது.

Categories

Tech |