மதுரை அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
அலங்காநல்லூர் அருகே ஐய்யூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.