பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க உள்ள சமந்தாவை படத்தில் நடிக்க வேண்டாம் என அவரின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இந்த நிலையில் சமந்தா பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நோ என்ட்ரி திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் செல்கின்றார் என செய்தி வெளியானது. இத்திரைப்படத்தில் சல்மான்கான், அனில்கபூர், ஃபர்தீன் கான் உள்ளிட்டோர் தலா மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க படத்தில் பத்து நடிகைகள் நடிக்கின்றார்கள். அந்த பத்து நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா.
மேலும் இத்திரைப்படத்தில் சமந்தா நடிப்பது இதுவரை உறுதியாகவில்லை. தமிழ், தெலுங்கு சினிமா உலகில் டாப் நடிகையாக இருக்கும் சமந்தா, இப்படி கூட்டத்தில் ஒருவராக நடித்து தனது மதிப்பை குறைத்துக் கொள்ளக்கூடாது என ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் சல்மான்கான் திரைப்படம் என்பதற்காக ஓகே சொல்லி விடக்கூடாது எனவும் கூறுகின்றனர்.