பிரிட்டனிலிருந்து வந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சிறையிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவாவுக்கு வந்துள்ளார். அந்தப் பெண்ணை ராமச்சந்திரன் எல்லாப்பா (32)என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறையில் இருந்து தப்பி ஓடிய ராமச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனை அடுத்து ராமச்சந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோஸ்கோட்டில் காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.